ஓட்டப்பிடாரம்,செப். 17: புளியம்பட்டி அருகே என்.புதூரில் கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளி மானை ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினர் லாவகமாக மீட்டனர். புளியம்பட்டியை அடுத்துள்ள என்.புதூர் கிராமத்தில் உள்ள 40 அடி கிணற்றுக்குள் புள்ளி மான் தவறி விழுந்துள்ளது. இது பற்றி அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த புள்ளி மானை வலை வைத்து உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த மானை வனஅலுவலர் ஆனந்த் தலைமையிலான வனக்குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
+
Advertisement