உடன்குடி,செப்.17: உடன்குடி அருகேயுள்ள சீர்காட்சி பகுதியை யொட்டி அனல் மின்நிலைய வளாகம் உள்ளது. தற்போது அனல்மின்நிலைய வளாகத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதால் அங்குள்ள மிளா உள்ளிட்ட விலங்குகள் தற்போது தண்ணீர் தேடி அருகிலுள்ள ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த இருநாட்களுக்கு முன்பு சீர்காட்சி-பிச்சிவிளை ரோட்டில் உள்ள விஜயநாராயணபுரத்தில் சாலையை கடந்த மிளா மீது அந்த வழியாக வந்த வாகனம் மோதியது. இதில் மிளாவின் நான்கு கால்களிலும் அடிபட்டு காட்டுக்குள் செல்ல முடியாமல் சாலையோரத்தில் கிடந்தது. அப்போது அந்த வழியாக வந்தவர்கள் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்த விரைந்து வந்த வனத்துறையினர் படுகாயமடைந்த மிளாவை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
+
Advertisement