தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தூத்துக்குடியில் அண்ணா சிலைக்கு மரியாதை
தூத்துக்குடி, செப்.16: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் ரவுண்டானாவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், மீன்வளம்- மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார் ரூபன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாடசாமி, செந்தூர்மணி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், ஜனகர், வீரபாகு, ரகுராமன், செல்வக்குமார், அரசு வழக்கறிஞர் பூங்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சுரேஷ், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் ராஜாஸ்டாலின், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பால்துரை, ஸ்டாலின், பகுதி செயலாளர்கள் ஆஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.