ஓட்டப்பிடாரம்,செப்.16: ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதியம்புத்தூர் மேலமடம் பகுதியில் அவரது படத்திற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். ஓட்டப்பிடாரம் ஊராட்சிக்குட்பட்ட மேலமடம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து ‘ஒன்றிணைவோம் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ எனும் தலைப்பில் உறுதிமொழி ஏற்றனர். இதேபோல் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து கிளை சார்பில் அதன் நிர்வாகிகள் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் வேல்ராஜ், ராஜாமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் துரைமுருகன், நிர்வாகிகள் முத்தையா சேட், சுந்தர்ராஜ் ராமகிருஷ்ணன், முருகன், மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் பியூலா, வள்ளியம்மாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement