Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலவச கண் பரிசோதனை முகாம்

தூத்துக்குடி, செப். 15: தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வைகுண்டம் புல்வாவழியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

கட்சியின் தலைவர் விஜய் ஆணையின் பேரிலும், கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆனந்த் ஆலோசனையின்படியும் நடந்த இம்முகாமிற்கு அரிமா சங்க முன்னாள் ஆளுநர் ஜேகேஆர் ஜெ முருகன் தலைமை வகித்தார். வைகுண்டம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஜெகன்ராஜ் முன்னிலை வகித்தார். தமிழக வெற்றிக் கழகமும், ஐ கால் கண் பரிசோதனை நிலையம் இணைந்து நடத்திய இம்முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இலவசமாக கண் பரிசோதனை மேற்கொண்டு பயன்பெற்றனர்.

நிகழ்வில் கிங்ஸ் அன்பரசன், புல்வாவழி அஜித், பெருமாள், குஷி கணேஷ், ஒன்றியச் செயலாளர் பொன்ராஜ் , நகரச் செயலாளர் அன்பரசு, கார்த்திக், பிரபு, சேசு, சுந்தர் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை காயலார் கணேஷ்குமார் செய்திருந்தார்.