ஆய்வு குளத்தூர்,செப்.14: வேப்பலோடை அரசு பள்ளியில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். ஓட்டப்பிடாரம் யூனியன், வேப்பலோடையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு திடீரென வருகைதந்த மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவர்களிடம் கலந்துரையாடிய அவர், கல்வித்திறன் குறித்து கேள்விகள் கேட்டார். 10ம் வகுப்பு மாணவர்களிடம் சமூக அறிவியல், பொருளாதாரம் குறித்து கேள்விகள் கேட்டதோடு அதற்கு சரியான பதில்கள் கூறிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பரிசுகள் வழங்கி பாராட்டி உற்சாகபடுத்தினார். இதைத்தொடர்ந்து பள்ளி வளாகங்களை பார்வையிட்ட ஆய்வு செய்த அவர், பள்ளிக்குத்தேவையான வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது தலைமை ஆசிரியர் சேகர் மற்றும் ஆசிரியர்கள்- அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
+
Advertisement