கோவில்பட்டி, செப். 14: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இனாம்மணியாச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இனாம்மணியாச்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்த இம்முகாமை தலைமை வகித்த கோவில்பட்டி யூனியன் பிடிஓக்கள் முத்துக்குமார், ஸ்டீபன் ரத்தினகுமார் ஆகியோர் துவக்கிவைத்தனர். இதில் பங்கேற்ற இனாம்மணியாச்சி, ஆலம்பட்டி, வடக்கு கங்கன்குளம், சீனிவாச நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, பட்டா பெயர் மாற்றம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய பிடிஓக்கள், விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர். நிகழ்வில் ஊராட்சி செயலாளர் சந்திரன், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் பீட்டர், ரமேஷ், மாவட்ட பிரதிநிதி முத்துராமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பழனிக்குமார், கலை இலக்கிய பிரிவு ஒன்றிய அமைப்பாளர் கரிகாலன், கிளைச் செயலாளர்கள் கண்ணன், பரமசிவம், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி மணிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement