தூத்துக்குடி, செப். 14: தூத்துக்குடி மாதவநாயர் காலனி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் திறந்துவைத்தார். தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவன்நாயர் காலனி கடற்கரை பகுதியில் காவல் துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை எஸ்பி ஆல்பர்ட் ஜான் ரிப்பன் திறந்துவைத்தார். அப்போது அவர் பேசுகையில் ‘‘மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது இப்பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்து தங்களது குறைகளை இங்கு நிவர்த்தி செய்துகொள்ளலாம்’’ என்றார். நிகழ்வில் தூத்துக்குடி நகர ஏஎஸ்பி மதன், வடபாகம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
+
Advertisement