நெல்லை, நவ. 13: நெல்லையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி 4 நாட்கள் நடக்கிறது. தேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, நவ.20ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நெல்லை ஸ்ரீபுரம் பீமா ஜூவல்லரி அருகில் ரோகிணி கோல்ட் அகாடமியில் நடக்கிறது. இப்பயிற்சியில் தங்கத்தின் தரமறிதல், ஹால்மார்க் தரம் அறிதல், உரைகல் பயன்படுத்தும் முறை, 24 கேரட் முதல் 9 கேரட் வரை நகைகளை தரம் கண்டறிதல், தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை, கல், ஆபரண வகைகள் மற்றும் போலி நகைகளை அடையாளம் கண்டறிதல், அதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து கற்றுத் தரப்படும்.
பயிற்சியில் 18 வயது முதல் ஆண்கள், பெண்கள் இருபாலரும் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. கல்வித் தகுதி தேவையில்லை, பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். மிகப்பெரிய நகை நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும் பணிபுரியலாம். இந்த சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பயிற்சியில் சேர விரும்புவோர் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், ஆதார் அட்டை, பயிற்சி கட்டணம் ரூ.8,200 ஆகியவற்றுடன் வரும் நவ.20ம் தேதி நேரில் வந்து பயிற்சியில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு www.rohinigoldacademy.com என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
