விளாத்திகுளம், நவ.12: புதூர் அருகே பி.ஜெகவீரபுரத்தில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.புதூர் ஒன்றியம் கந்தசாமிபுரம் ஊராட்சி பி.ஜெகவீரபுரபுரம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டி தர வேண்டும் என்றும் அப்பகுதியினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான பணியை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் புதூர் பிடிஓ தினகரன், ராஜாராம், துணை பிடிஓ ஜெயமித்ரா, புதூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு செல்வராஜ், மத்திய ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் செல்லப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், கிளைச் செயலாளர் சேகர் உட்பட கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.
+
Advertisement
