Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்

கோவில்பட்டி, அக். 12: கோவில்பட்டியில் மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. தூத்துக்குடி காமராஜர் அரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த ஒன்றியச் செயலாளர் முருகேசன், கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் ‘‘2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ள 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று வெற்றிக்கனியை சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இப்போதே தேர்தல் பணியாற்ற வேண்டும். முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத்தொகை, தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை வீடு, வீடாகச் சென்று மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். வரும் 2026ல் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவது உறுதி, என்றார்.

கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் பொன்னுச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமார், முருகன், தங்கச்சாமி, அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள், வழக்கறிஞரணி மாவட்ட தலைவர் நாகராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாதேஸ்வரன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் அழகுராஜ், சீனிவாசன், சின்னத்தாய், ஒன்றிய பொருளாளர் கண்ணன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் அன்னராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் உத்ரகுமார், தொமுச நாகராஜ், மகளிர் அணி ஒன்றிய அமைப்பாளர் பாலம்மாள், மகளிர் தொண்டரணி ஒன்றிய அமைப்பாளர் பவானி, சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் கற்பகம் மற்றும் கிளை செயலாளர்கள், பாக முகவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.