தூத்துக்குடி, செப்.12: எம்பவர் இந்தியா நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் செயலாளர் சங்கர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 37,328 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளில் பிஓஎஸ் எனும் மின்னணு கருவி மூலம் பொருள்கள் விநியோகத்திற்கான ரசீது வழங்கப்பட்டு வருகிறது. எடை இயந்திரம் மற்றும் பிஓஎஸ் கருவியை இணைப்பதற்கான இணையதள வேகம் குறைவாக இருப்பதால், கால தாமதம் ஏற்பட்டு ரேஷன் கடை ஊழியர்கள் திணறி வருகின்றனர்.இவ்வாறு ஏற்படும் கால தாமதத்தால் வேலைக்கு செல்பவர்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காகவே ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, இணையதள சேவையை 5ஜி அளவிற்கு உயர்த்தி, அதற்கு தகுந்தாற் போன்ற உள்கட்ட அமைப்புகளை பிஓஎஸ் கருவிகளில் உடனடியாக மாற்றம் செய்து, தற்போதைய புதிய நடைமுறையில் உள்ள சிக்கல்களையும், பிரச்னைகளையும் சரிசெய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு எளிதாக ரேஷன் பொருள்கள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
+
Advertisement