கோவில்பட்டி, டிச. 11: கோவில்பட்டியில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை நிராகரிக்கும் தாசில்தாரை கண்டித்தும், அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் அன்புராஜ் தலைமை வகித்தார். தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி, காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகர், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் பெஞ்சமின், தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தமமுக வடக்கு மாவட்ட செயலாளர் பாபு, நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் சோலையப்பன், மத்திய, மாநில அரசு ஊழியர் மற்றும் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் இசக்கிதாஸ், தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி மாவட்ட தலைவர் ஜெயபால் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
+
Advertisement


