உடன்குடி, டிச.11: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் கார்த்திகை மாத கடைசி செவ்வாய்க்கிழமை முன்னிட்டு அம்மன் சப்பரத்தில் வீதியுலா நடந்தது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 2 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 9மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் சப்பரத்தில் ரதவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரியூர் செங்கருட பெருமாள் சுவாமி கோயில் கொடை விழா கடந்த 8ம்தேதி மாலை 6 மணிக்கு 504 திருவிளக்கு பூஜையுடன் துவங்கியது. இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 1 மணிக்கு சிறப்பு பூஜை, நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், பெருமாள் சுவாமி சப்பரத்தில் தெரு பவனி நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு கோயில் கொடை விழா நிறைவு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
+
Advertisement


