சாத்தான்குளம்,செப்.11: தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீது பொய் வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்யக்கோரி தவெகவினர் நேற்று சாத்தான்குளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கட்சி பணிக்காக சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீது திருச்சி போலீசார் பதிவு செய்த வழக்கை உடனடியாக வாபஸ் பெறக்கோரி தூத்துக்குடி மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகி முருகன் தலைமை வகித்து பேசினார். சாத்தான்குளம் நகர செயலாளர் சிவா, ஒன்றிய செயலாளர்கள் மேற்கு பாஸ்கர், தெற்கு சங்கர், மத்திய ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுச் செயலாளர் ஆனந்த் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும், அந்த வழக்கு உடனடியாக வாபஸ் பெற கேட்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஐயப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருண், கட்சி நிர்வாகிகள் மாசானமுத்து, யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement