தூத்துக்குடி, செப்.11: தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவு மற்றும் 17வயதுக்கு உட்பட்ட பிரிவில் முதல் இடத்தை பெற்று பரிசு கோப்பையும் சான்றிதழும் பெற்றனர். மேலும் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டாம் இடம் பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் சில்வா பெர்னாந்த்தையும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தாளாளர் பெர்நதெத் மேரி மற்றும் தலைமை ஆசிரியர் ஜெயந்தி ஆகியோர் பாராட்டினர்.பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
+
Advertisement