ஏரல், அக்.10: ஏரலில் பைக் மீது மினிலாரி மோதியதில் வாலிபர் நசுங்கி உயிரிழந்தார். ஏரல் அருகேயுள்ள கீழமங்கலகுறிச்சியைச் சேர்ந்த முத்துக்குமாரின் மகன் முத்துவேல்ராஜ் (23). தனியார் நிதி நிறுவன ஊழியரான இவர் நேற்று மதியம் வீட்டிற்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார். ஏரல் பாரதியார் ரோட்டில் காவல் நிலையம் அருகே வந்தபோது பின்னால் வந்த மினிலாரி மோதியதில் இவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்துவந்த ஏரல் எஸ்ஐ பழனிசாமி மற்றும் போலீசார் முத்துவேல்ராஜின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மினி லாரியை ஓட்டி வந்த சேதுக்குவாய்த்தான் சர்ச் தெருவை சேர்ந்த மரியஜோசப் கிளாட்வினை கைது செய்தனர்.
+
Advertisement