சாயர்புரம் போப் பள்ளியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அறிக்கை
ஏரல், அக்.10: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நாளை (11ம் தேதி) சனிக்கிழமை நடக்கிறது. இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், வைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நாளை (11ம் தேதி) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. சாயர்புரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெறும் இம்முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், மகளிர், குழந்தை நல மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் சிகிச்சை மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இசிஜி, எக்கோ மற்றும் பலவிதமான ரத்த பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. எனவே பொதுமக்கள் இம்முகாமில் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.