கோவில்பட்டி, அக். 8: நாலாட்டின்புதூரில் ரூ.42 லட்சம் மதிப்பில் புதிதாக சாலை அமைக்கும் பணியை முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் துவக்கிவைத்தார். கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் ரயில்வே பீடர் ரோடு பகுதியில் புதிதாக சாலை வசதி செய்துதரக் கோரி கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்டு 2025-26ம் ஆண்டு முதலமைச்சர் கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் ரூ.42 லட்சம் மதிப்பில் புதிதாக சாலை அமைக்கும் பணியின் துவக்க விழா நடந்தது. தலைமை வகித்த முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், இதற்கான பூமி பூஜையில் பங்கேற்று சாலை அமைப்பு பணியைத் துவக்கிவைத்தார். நிகழ்வில் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அயலக அணி மாவட்டத் தலைவர் சுப்புராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி தாமோதரகண்ணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜெமினி என்ற அருணாச்சலசாமி, முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர் சேகர், ஒப்பந்தக்காரர் பிரதீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
+
Advertisement