குளத்தூர், டிச. 7: குளத்தூர் அருகே உள்ள கீழவைப்பார், சிப்பிகுளம் கடற்கரை பகுதியில் கடந்த வாரம் புயல், மழையால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பயங்கர காற்று வீசி வருகிறது. இதனால் மீன்பாடுகள் இன்றி வெறும் வலையுடன் மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். ஒருசில மீனவர்கள் வலையில் குறைவான மீன்கள் வரத்திருந்த நிலையில் ஏலக்கூடத்தில் குறைவான மீன்களே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. குறைவான மீன்கள் வரத்தால் வெளியூர் வியாபாரிகளுக்கு சரிவர மீன்கள் கிடைக்காமல் வெறுங்கையுடனே திரும்பி சென்றனர். இதுகுறித்து மீன்வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில வாரங்களாக புயல் மழையால் கடல் தொழிலுக்கு செல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாகத் தான் தொழிலுக்கு சென்றோம்.ஆனால் கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் Aவலைகள் ஒன்றுக்கு ஒன்று பின்னிக்கொண்டு மீன்கள் சிக்காமல் வெறும் வலையுடனே கரை திரும்பியுள்ளோம். , என்றனர்.
+
Advertisement


