Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோவில்பட்டியில் குடியிருப்பு நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, அக். 7: இ-பட்டாவில் பதிவேற்றம் செய்யக்கோரி கோவில்பட்டியில் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி தியாகி லீலாவதி நகர் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் இ-பட்டாவில் பதிவேற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இஎஸ்ஐ மருத்துவமனை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாரியப்பன் தலைமை வகித்தார். குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் உத்தண்டுராமன் விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கை மனு கொடுத்த அனைவருக்கும் இ-பட்டாவில் பதிவேற்றம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.