தூத்துக்குடி, அக். 7: விளாத்திகுளம் அருகேயுள்ள ராமச்சந்திராபுரம் கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் ரேஷன் கடை இல்லை. அருகே உள்ள கெச்சிலாபுரம் சென்றுதான் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. பிரதான சாலையை கடந்து செல்ல வேண்டியிருப்பதால் முதியவர்கள் சாலையை கடந்து செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதுபோல அங்கன்வாடி மையமும் கெச்சிலாபுரத்தில்தான் உள்ளது. குழந்தைகளை அங்கே அழைத்து கொண்டு விடுவதில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே ராமச்சந்திராபுரத்தில் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையம் அமைத்துத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
+
Advertisement