குளத்தூர், டிச. 6: குளத்தூரில் இருந்து த.சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், முத்துக்குமரபுரம் கிராமங்களை இணைக்கும் கிராமச்சாலை கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாரத பிரதமர் கிராமச்சாலை திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்லம்பரம்பு பகுதியில் அமைக்கப்பட்ட கல் குவாரியில் இருந்து கனரக வாகனங்களில் 30 முதல் 60 டன் வரையிலான கற்கள், எம்.சாண்ட், கிராவல் மண் போன்றவை தினமும் குவாரியில் இருந்து சந்திரகிரி, முள்ளூர், வீரபாண்டியபுரம், முத்துக்குமரபுரம், குளத்தூர் வழியாக கொண்டு செல்லப்படுவதால் இப்பகுதியில் அமைக்கப்பட்ட சாலை சிதிலமடைந்து சின்னாபின்னமாகி குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்று காட்சியளிக்கிறது. இதையடுத்து இப்பகுதி பொதுமக்கள் ஒருங்கிணைந்து குளத்தூர் பஜார்வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சாலையை சேதப்படுத்திய லாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட குவாரி மீது எடுக்க வேண்டும். சேதமடைந்துள்ள சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
+
Advertisement

