Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி வழங்கல்

தூத்துக்குடி, நவ. 6: திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கியின் 2023-24ம் ஆண்டுக்கான லாபத்தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி மற்றும் கல்வி நிதிக்கான தொகை ரூ.1,71,440க்கான காசோலையை மண்டல இணை பதிவாளர் ராஜேசிடம் வங்கியின் துணை பதிவாளர்- செயலாட்சியர் சீனிவாசன் வழங்கினார். அப்போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணை பதிவாளர்- செயலாட்சிர் காந்திநாதன், திருச்செந்தூர் சரக துணை பதிவாளர் சக்திபெமிலா, கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் சாம்டேனியல்ராஜ், திருச்செந்தூர் நகர வங்கியின் பொதுமேலாளர் ரிச்சர்ட் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.