தூத்துக்குடி, நவ. 6: கோரம்பள்ளம் சித்தர் பீடத்தில் பருவமழை, விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பிரத்யங்கிராதேவி- காலபைரவர் சித்தர் பீடத்தில் ஜப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு குருமகாலிங்கேஸ்வரருக்கும், நந்திக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர், அன்னத்திலான சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.மேலும் பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், பக்தர்கள் வாழ்வில் செல்வங்கள் பெருகிடவும், மகா பிரத்யங்கிராதேவி, மகா காலபைரவருக்கு யாகம் மற்றும் மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக வழிபாடுகளும், தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மகளிரணியினர் செய்திருந்தனர்.
+
Advertisement
