உடன்குடி, டிச. 5: சந்தையடியூர் பண்டாரவிளை தெரு கல்யாண விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, 10.30 மணிக்கு கும்பாபிஷேகம், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் மாவட்ட காங். முன்னாள் பொருளாளர் நடராஜன், சந்தையடியூர் முத்தாரம்மன் கோயில் நிர்வாகி சிவக்குமார் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகியும், திமுக நகர செயலாளரும், உடன்குடி பேரூராட்சி துணை தலைவருமான சந்தையடியூர் மால்ராஜேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
+
Advertisement

