தூத்துக்குடி, நவ.5: கோவில்பட்டி, கருப்பூர் வெங்கடாசலபுரம் கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், கருப்பூர் கிராமத்தில் குண்டுக்கல்லை உடைத்து ஜல்லி மற்றும் எம்.சாண்ட் தயாரிக்கும் தனியார் கிரஷர் தொழிற்சாலை உள்ளது. இந்த கிரஷர் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் தூசு காரணமாக விவசாய நிலங்களுக்கும், கால்நடைகளுக்கும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனால் கிராம மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது. எனவே விவசாய நிலங்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் தனியார் கிரஷர் ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
