ஆறுமுகநேரி, அக். 1: ஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது. ஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன் தலைமையில் பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும் இனிப்பு மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் அசோக்குமார், சிவா, முத்து, பாலசிங், முருகன், கமலச்செல்வி, வசந்தி, கோமதி, சுகாதார மேற்பார்வையாளர் நாராயணன் உள்பட தூய்மைப் பணியாளர்களும், பேரூராட்சி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
+
Advertisement