Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நகர ெஜபக்குழுவினருக்கான திருப்பலி

தூத்துக்குடி, ஜூலை 30: தூத்துக்குடி பனி மயமாதா பேராலயத்திருவிழாவில் 4வது நாளான நேற்று நகர ெஜபக்குழுவினருக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். தூத்துக்குடியில் உலகளவில் பிரசித்திபெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 443 ஆவது ஆண்டுத் திருவிழா கடந்த 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் ஆக.5ம் தேதி வரை 11 நாள்கள் விமரிசையாக நடக்கிறது. திருவிழா நாள்களில் தினமும் உலக நன்மை, சமாதானம், மாணவ- மாணவிகளின் கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், நற்கருணை பவனி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று 4ம் திருநாளை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2ம் திருப்பலி நடந்தது. காலை 6. 30 மணிக்கு பாத்திமாநகர் பங்கு மக்களுக்காக நடந்த திருப்பலியில் பாத்திமாநகர் பங்கு இறைமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

காலை 7.30 மணிக்கு இனகோநகர் பங்கு இறைமக்களுக்கான திருப்பலி நடந்தது. காலை 8.30 மணிக்கு ரத்தினபுரம் பங்கு இறைமக்களுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. காலை 9.30 மணிக்கு புனித அடைக்கல அன்னை சபை அருட்சகோதரிகள், தஸ்நேவிஸ்மாதா பெண்கள் பள்ளி மாணவிகளுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. முற்பகல் 11 மணிக்கு நகர ஜெபக்குழுவினர்களுக்கான திருப்பலி நடந்தது இதில் டிவைன் மெர்சி தியான இல்லத்தினர் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு எம்சவேரியார்புரம் மற்றும் முத்தையாபுரம் பங்கு இறைமக்களுக்கான திருப்பலி ஆலய பங்குத்தந்தை ஸ்டார்வின் முன்னிலையில் நடந்தது. இதையடுத்து இரவு 7 மணிக்கு ‘வறியோருக்கான உதவிக்கரம் நீட்ட’ என்ற தலைப்பில் பங்குத்தந்தையான வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தல அதிபர் இருதயராஜ் மறையுரை நிகழ்த்தினார். திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு அன்னையின் அருளாசி பெற்றுச்சென்றனர். உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு ஆணைகள் தூத்துக்குடி, ஜூலை 30: தூத்துக்குடியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களில் உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கான ஆணைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, அரசுத் துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் பொதுமக்கள் பெற்று பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி 37 மற்றும் 42வது வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சண்முகபுரம் பகுதியில் உள்ள சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில் 798 மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப மனுக்கள், 180 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த மனுக்கள், 67 மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த மனுக்கள், 64 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த மனுக்கள், 55 எரிசக்தி துறை சார்ந்த மனுக்கள் உட்பட மொத்தம் 1310 விண்ணப்ப மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

முகாமை பார்வையிட்டு ஆய்வுசெய்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், உடனடியாகத் தீர்வுகாணப்பட்ட மனுதாரர்களுக்கான ஆணைகளை வழங்கினார். மின் இணைப்பு பெயர் மாற்றம் குறித்து விண்ணப்ப மனு அளித்த பயனாளிக்கு உரிய ஆவணத்தை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் ‘‘முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும். எனவே பொதுமக்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த முகாம்களில் தங்கள் மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்’’ என்றார்.

நிகழ்வில் மாநகராட்சி உதவி ஆணையாளர் பாலமுருகன், தாசில்தார் முரளிதரன், சமூக பாதுகாப்பு திட்ட முருகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகராட்சி மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் பாப்பாத்தி, பொன்னப்பன், சண்முகபுரம் பகுதி துணைச் செயலாளர் ஜெய்சிங், வட்டச் செயலாளர்கள் பொன்ராஜ், சுரேஷ் மகாராஜன், மாரீஸ்வரன், வட்டப் பிரதிநிதி சற்குணம், மருத்துவர் அணி மாவட்டத் தலைவர் அருண்குமார், இளைஞரணி மாநகர அமைப்பாளர் அருண்சுந்தர், சண்முகபுரம் பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் கணேஷ், பெருமாள்கோவில் அறங்காவலர்குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி, அல்பர்ட் உள்ளிட்ட பலர் கொண்டனர்.