குளத்தூர், ஆக.2: விளாத்திகுளம் ஒன்றியம் குளத்தூர் அருகே புளியங்குளம் ஊராட்சியில் பூசனூர், மார்த்தாண்டம்பட்டி, வீரபாண்டியபுரம், த.சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், அயன்செங்கல்படை, ஜமீன்செங்கல்படை ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் விதமாக புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. முகாமை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் துவக்கிவைத்து முகாமில் வழங்கப்படும் சேவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கடந்த வாரம் குளத்தூரில் நடந்த முகாமில் அளிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு தீர்வு காணும்விதமாக பட்டா மாறுதல், மின்இணைப்பு பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருத்துவ பெட்டகம், கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் போன்றவைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
முகாமில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, விளாத்திகுளம் பிடிஓக்கள் தங்கவேல், ரஞ்சித், வட்டாட்சியர் கண்ணன், சமூகபாதுகாப்பு வட்டாட்சியர் விமலா, துணை வட்டாட்சியர் பொன்னம்மாள், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் மேற்கு அன்புராஜன், தெற்கு இம்மானுவேல், புளியங்குளம் ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி ராஜகோபால், ஒன்றிய பொருளாளர் முனியசாமி, கிளைச்செயலாளர்கள் கருப்பசாமி, சிலம்பு முனியசாமி, மதிராமன், கிருஷ்ணகுமார், செல்வகுமார், கிராமத்தலைவர் முனியசாமி, மாரியப்பன், பூசனூர் கிளைச்செயலாளர் பரமசிவபாண்டியன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.