தூத்துக்குடி, ஜூலை 29: தூத்துக்குடி ராமையா மஹாலில் நடந்துவரும் கேரளா பர்னிச்சர் கண்காட்சி மற்றும் விற்பனை பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஆக. 18ம் ேததி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரளா பர்னிச்சர் உரிமையாளர் நவ்ஷாத் மற்றும் மேலாளர் பினிஷ் மேத்யூ ஆகியோர் கூட்டாக கூறுகையில் ‘‘தூத்துக்குடி ராமையா மஹாலில் அமைக்கப்பட்டு நடந்துவரும் கேரளா பர்னிச்சர் விற்பனை கண்காட்சி 28ம்தேதியுடன் (நேற்றுடன்) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கோலாகலமாக நடந்துவரும் பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இக்கண்காட்சியானது வரும் ஆகஸ்ட் 18ம்தேதிவரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல் இக்கண்காட்சி தினமும் காலை 10 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடைபெறும். இதில், வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்கள், உயர்ந்த தரத்தில் குறைந்த விலையில் உற்பத்தி விலையிலேயே கிடைக்கின்றன. உலகப் புகழ்பெற்ற மைசூர் கேண்ட் கார்விங் பர்னிச்சர்கள், காம்போ ஆபரில் கட்டில் வாங்குபவர்களுக்கு மெத்தை இலவசமாக வழங்கப்படுகிறது. நீலாம்பூர் தேக்குமர வகைகளால் வடிவமைக்கப்பட்ட பர்னிச்சர்கள், சோபா கம்பெட், மேஜிக் பெஞ்ச் ஒரே இடத்தில் 60 சதவீதம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. 200க்கும் மேற்பட்ட விதவிதமான பர்னிச்சர்களை தாங்கள் விரும்பும் வகையில் எங்களது கம்பெனி தயாரிப்புகளை தள்ளுபடியுடன் பெற்றுச்செல்லலாம். மேலும் பண்டிகை தினம் அன்றோ அல்லது தாங்கள் விரும்பும் தேதியிலோ பர்னிச்சரை ஆஃபர் தொகையில் முன்பணம் செலுத்தி புக்கிங் செய்தால் குறித்த இடத்தில் இலவசமாக டோர் டெலிவரி செய்து தருகிறோம். பர்னிச்சர் கண்காட்சியை வாடிக்கையாளர்கள் அனைவரும் பார்வையிட்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்’’ என்றனர்.