Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி, ஜூலை 25: தூத்துக்குடியில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, அரசுத்துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் பொதுமக்கள் பெரும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி 15,16,17வது வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தபால்தந்தி காலனியில் உள்ள லியோ நர்சரி பள்ளியில் நடைபெற்றது.

முகாமில் 1029 மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப மனுக்கள், 220 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த மனுக்கள், 107 மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த மனுக்கள், 49 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த மனுக்கள் உட்பட மொத்தம் 1640 விண்ணப்ப மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இதில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் முகாமை பார்வையிட்டார்.

பின்னர், மின் இணைப்பு பெயர் மாற்றம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும் விண்ணப்ப மனு அளித்த பயனாளிகளுக்கு உரிய ஆவணங்களை வழங்கினார்.

முகாமில், சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகேஸ்வரி, உதவி ஆணையர் பாலமுருகன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மண்டல தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கவுன்சிலர்கள் இசக்கிராஜா, கண்ணன், ராமர், வட்டச் செயலாளர்கள் பொன்பெருமாள், மந்திரகுமார், மாநகர இலக்கியஅணி தலைவர் சக்திவேல், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், வழக்கறிஞர்அணி துணை அமைப்பாளர் செல்வலட்சுமி, பெருமாள்கோவில் அறங்காவலர்குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி, அல்பர்ட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.