Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமில் தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணை

தூத்துக்குடி, ஜூலை 24:தூத்துக்குடியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமில் உடனடியாக தீர்வு காணப்பட்ட பயனாளிக்கு அதற்கான ஆணையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்று பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 40, 46 மற்றும் 47வது வார்டுகளுக்கான சிறப்பு முகாம் காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மின் இணைப்பு பெயர்மாற்றம் கோரி விண்ணப்பித்த பயனாளிக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், தூத்துக்குடி, காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 1299விண்ணப்பங்கள் வந்துள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த விண்ணப்பங்கள் 191, கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்ந்த விண்ணப்பங்கள் 164, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த விண்ணப்பங்கள் 80, எரிசக்தி துறை சார்ந்த விண்ணப்பங்கள் 69, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த விண்ணப்பங்கள் 72 உள்ளிட்ட மொத்தம் 1991 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி குறுகிய காலத்தில் விண்ணப்ப மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட்ராமன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், வட்டச் செயலாளர்கள் டென்சிங், லியோஜான்சன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், பகுதி திமுக பிரதிநிதி மரியதாஸ், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மகளிர்அணி கமலி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், பகுதி தகவல் தொழில்நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்

குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டு ஆறுமுகநேரி, ஜூலை 24: தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் சிறப்பு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு கடந்த மே மாதம் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கராஜ் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில் ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் குற்ற சம்பவங்களை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். மேலும் அதிக அளவில் வழக்குகள் பதிவு செய்து, நடப்பு கோப்புகளை விரைவில் முடித்துள்ளனர். இதற்காகவும் கடந்த இரண்டு மாதங்களில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் போலீசார் சிறப்பாக பணியாற்றியதற்காகவும் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் சிறப்பு கேடயத்தை வழங்கி பாராட்டினார்.