தூத்துக்குடி, ஜன. 10: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்தவர் முத்து(60). இவர், இதே பகுதியை அய்யப்ப பக்தர்களுடன் சபரிமலைக்கு செல்வதற்காக கடந்த 4ம் தேதி வேனில் திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி- மதுரை பைபாஸ் ரோட்டில் வந்த போது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினி ஜேசிபி இயந்திரத்தில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முத்து காயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


