ஆறுமுகநேரி, ஜூலை 26: ஆறுமுகநேரி பெர்ல்ஸ் அகாடமி மாணவர் நீட் தேர்வில் தமிழக அரசு 7.5% இடஒதுக்கீட்டில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தும், மாநில அளவில் 60வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2025 நீட் தேர்வில் தமிழகத்தில் சுமார் 1,58,429 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் 13,727 தேர்வு எழுதினர். இதில் தமிழக அரசு 7.5% இடஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கான பட்டியலை மக்கள் நல வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வெளியிட்டார்.
இதில் ஆறுமுகநேரி பெர்ல்ஸ் அகாடமியில் பயின்ற மாணவர், திருச்செந்தூர் ராமசாமிபுரத்தைச் சேர்ந்த பனைத்தொழிலாளி பரமசிவன் மகன் செல்வசதீஷ் மாநில அளவில் 60வது இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இதே அகாடமியில் பயின்ற மாணவி பிரணவிகா 577 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 227வது இடத்தைப் பெற்றுள்ளார்.
மேலும் இதே அகாடமியில் பயின்ற 14க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழக தரவரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி சேர்மன் சுப்பையா, அன்பு அம்மாள் அறக்கட்டளை பொருளாளர் உஷாதேவி, பெர்ல்ஸ் அகாடமி நிறுவன இயக்குனர் மபத்லால், இயக்குனர் ராஜகுமாரி மபத்லால், பள்ளி முதல்வர் கிறிஸ்டினா பிரபாகரன், துணை முதல்வர் முத்துஜா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்