முத்துப்பேட்டை,அக். 31: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை நூலகத்திற்கு நேற்று திருவாரூர் மாவட்ட நூலக அலுவலர் பா.முத்து வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார் அப்பொழுது ஓய்வு பெற்ற மாவட்ட நல கல்வியாளர் சிவ.ச.கண்ணன் மற்றும் பலர் நூலகத்தில் புரவலராக தங்களை இணைத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் சிங்காரம்,முத்துப்பேட்டை நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் சுல்தான் இப்ராஹிம், ஆசிரியர் ராஜாராமன், சிவ.சுப்பிரமணியம், மன்சூர், அலீம், முஸ்தாக், சகாபுதீன், சிவ.பாலசுப்பரமணியன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். முன்னதாக அனைவரையும் முத்துப்பேட்டை நூலகர் ஆசைத்தம்பி வரவேற்று பின்னர் நிறைவில் நன்றி கூறினார்.
 
  
  
  
   
