திருத்துறைப்பூண்டி, அக்.30: திருத்துறைப்பூண்டி பகுதியில் சேதம் அடைந்த மின்கம்பம் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெரு பகுதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையோரத்தில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து எந்த நேரத்திலும் கிழே விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக செல்வேருக்கு உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைத்து தர பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
+
Advertisement
