Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீடாமங்கலம், பரப்பனாமேடு பகுதியில் இன்று மின்தடை

நீடாமங்கலம், ஆக.30 நீடாமங்கலம் சுற்று வட்டாரப்பகுதியில் இன்று மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ஜான்விக்டர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் 110/ 3311 கிலோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (30ம் தேதி) நடைபெற இரு ப்பதால் நீடாமங்கலம் மற்றும் பரப்பனாமேடு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு உதவி செயற்பொறியாளர் இயக்குதலும், பராமரித்தலும் புறநகர் ஜான் விக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.