திருத்துறைப்பூண்டி, ஆக.29: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 15 இடங்களில் 4.40 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணியைஎம்எல்ஏ, நகர்மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவாரூர் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ஏற்கனவே இருந்த மழைநீர் வடிகால் பகுதியில் ஆக்கிரப்புகள் அதிகரித்தால் சிறிய மழை பெய்தால் கூட நகரில் மழை நீர் தேங்கி நிற்கும் இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
பொதுமக்கள், கவுன்சிலர் கோரிக்கை அடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ 4,40 கோடி மதிப்பீட்டில் 15 இடங்களில்6.045கிலோமீட்டருக்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் ராமர்மடத் தெருவில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை எம்எல்ஏ மாரிமுத்து, நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், பொறியாளர் வசந்தன் ஆகியோர் பார்வையிட்டனர். மழை காலம் துவங்கும் முன்பாக மழைநீர் வடிகால் பணி முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.