திருவாரூர், ஆக.29: பேரளத்தில் குடும்ப செலவினத்தினற்கு பணம் தராமல் குடிப்பதை மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே இருந்து வரும் திருக் கொட்டாரம் கிராமத்தில் வசித்து வந்தவர் முதியவர் லட்சுமணன் (60). கூலித்தொழிலாளியான இவர் தினந்தோறும் வேலைக்கு சென்று விட்டு கூலிப்பணத்தில் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மனைவி தவமணி என்பவர் லட்சுமணனை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த லட்சுமணன் கடந்த 25 ந்தேதி வீட்டில் யாருக்கும் தெரியாமல் பூச்சிக்கொல்லி மருந்தினை குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து மனைவி தவமணி மற்றும் உறவினர்கள் அவரை உடனடியாக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது தொடர்பாக பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.