வலங்கைமான், செப்.27: வலங்கைமான் அருகே கண்டியூர் ஊராட்சிபகுதியில் உள்ளிட்ட ஐந்து கிராம ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 500 மனுக்கள் பெற்றபட்டன. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா கண்டியூர் ஊராட்சி நரசிங்கமங்கலம் பகுதியில் மேல விடையல் கீழ விடையல் சித்தன்வாலுர் கண்டியூர் மாத்தூர் ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில்பொதுமக்களிடமிருந்து மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக 100 மனுக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் வர பெற்றன.
நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட தனித்துணை ஆட்சியர் தங்க பிரபாகரன்வலங்கைமான் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன் தட்சிணாமூர்த்தி வலங்கைமான் வட்டாட்சியர் ஓம் சிவக்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி முரளிமற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.