நீடாமங்கலம்,செப்.27: நீடாமங்கலம் அருகே பெரம்பூர் ஊராட்சியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம், பெரம்பூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நேற்று கிராம மூதியவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் குருசெல்வமணி அனைவரையும் வரவேற்றார்.
கிராம சபை கூட்டத்தில் வட்டார வள அலுவலர் ராமஜெயம் ,பற்றாளர் பாண்டியன் ,கிராம வளஅலுவலர்கள் திவ்யா, சுதா ,அருளரசி மற்றும் நடராஜன்,சங்கீதா மற்றும் கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் .கூட்டத்தில் 2024 -25 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கையாக 100 நாட்கள் வேலையை 200 நாட்களாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் .கூட்ட முடிவில் நரசிம்மன் நன்றி கூறினார்.படம்.நீடாமங்கலம்,அருகில் பெரம்பூரில் சமூக தணிக்கை கிராமசபை கூட்டம் நடந்தது.