திருத்துறைப்பூண்டி, செப்,25: திருத்துறைப்பூண்டி அருகே மரைக்காகோரையாற்றில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரையைஅகற்ற ேவண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர் மரைக்காகோரையாற்றில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் ஆற்றில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடியினால் மழைக்காலங்களில் விளைநிலங்களில் தேங்கிய மழை நீரை வடிய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர், வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்பாக ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
+
Advertisement