மன்னார்குடி, செப். 25: மன்னார்குடி அருகே தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் பறந்து வந்து கடித்ததில் காயம் அடைந்த பள்ளி மாணவர் உள்பட 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மன்னார்குடி அருகே அத்திக்கோட்டை கிராமம் தெற்க்கு தெருவில் ஒருவர் வீட்டில் இருந்த தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் நேற்று காலை திடீரென பறந்து வந்து கொட்டியதில் நிலை குலைந்த பொது மக்கள் அலறி அடித்து ஓடினர்.
இதில், அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர் சக்திவேல் (9), சந்தோஷ் (18), லதா (44), கோபால் (50) ஆகிய நான்கு பேரை கதண்டுகள் துரத்தி, துரத்தி கடிதத்தில் அவர்கள்காயம் அடைந்தனர். காயம்பட்டவர்கள் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற னர். இதுகுறித்து வடுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.