திருத்துறைப்பூண்டி,அக்.24: திருத்துறைப்பூண்டி அருகே மழையால் தண்ணீல் மூழ்கிய குறுவை நெற்பயிர்களை எம்பி செல்வராஜ், எம்எல்ஏ மாரிமுத்து ஆகியோர் ஆய்வு செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆண்டாங்கரை வருவாய் கிராமத்தில் 386 ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நெல் முற்றி அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இந்நிலையில், அறுவடை செய்ய முடியாமல் அழுகிய நெற் பயிர்களை நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோசப், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜவகர், ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் எங்களுக்கு வாழ்வாதரமே விவசாயம் தான் அரசிடம் எடுத்து கூறி இழப்பீட்டை சரி செய்ய உரிய நிவாரணம் பெற்று தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர்,

