நீடாமங்கலம்,அக்24: நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் புகையிலை இல்லா இளைய சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நீடாமங்கலம் அரசு மருத்துவமனை முதன்மை குடியுரிமை மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் சிவகுமார், சதீஷ்குமார் மற்றும் சண்முகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் புகையிலை இல்லா இளைய சமுதாயம் பற்றிய உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.

