திருவாரூர்,அக்.24: திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம் வரும் 29ம் தேதி மன்னார்குடியில் நடைபெறுவதாக கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் கல்வி கடன் முகாம் வரும் 29ந் தேதி காலை 10 மணி அளவில் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. எனவே இந்த முகாமில் கல்வி கடன் தேவைப்படும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
+
Advertisement

