திருவாரூர், ஆக 22: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி, சிங்களாந்தி மற்றும் வேப்பஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நோற்று உறுப்பினர் கல்வி திட்ட முகாம் திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் நடத்தப்பட்டது. இம்முகாமில் இப்கோ உர நிறுவனத்தின் திருவாரூர் மாவட்ட மேலாளர் பரஞ்ஜோதி விவசாயிகளுக்கு நானோ உரங்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் பிரபா, திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சார்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் கார்த்தீபன், திருத்துறைப்பூண்டி வட்டார கள அலுவலர் ரவிச்சந்திரன், முதுநிலை ஆய்வாளர், செயலாட்சியர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சங்க செயலாளர்கள் கமலராஜன் மற்றும் வீரசெல்வம் ஆகியோர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பணியாளர்களுடன் இணைந்து மேற்கொண்டனர்.