திருவாரூர், நவ. 21: திருவாரூர் மாவட்டத்தில் நலிவுற்ற கலைஞர்களுக்கான உதவிதொகை பெறுவதற்கு சிறப்பு முகாமானது நாளை தாலுக்கா அலுவலகங்களில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியக்கலைகள், ஓவியம், சிற்பம் ஆகிய கலைத்துறைகளில் குறிப்பிடத்தக்க வகையில் சேவையாற்றிய திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 58 வயது நிறைந்த,
அதற்கு அதிகமான வயதுடைய நலிந்த நிலையில் வாழும் வயோதிகக் கலைஞர்களுக்கு நலியுற்ற கலைஞர்களுக்கான நிதிஉதவித்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் நாளை (22ந் தேதி) திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து தாலுக்கா அலுவலகங்களிலும் தனிவட்டாட்சியர் தலைமையில் சிறப்புமுகாம் நடைபெறவுள்ளது. எனவே தகுதியுள்ள அனைத்து நலிவுற்ற கலைஞர்களும் மேற்கண்ட முகாமில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.


