நீடாமங்கலம், ஆக.21: நீடாமங்கலம் அருகே வையளத்தூர் வடக்கு தெருவில் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டியை சீரமைக்க மக்கள் கோரிக்கை. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி ஊராட்சி வையகளத்தூர் வடக்கு தெருவில் அமைந்துள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டி சுமார் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.இந்த தொட்டி கடந்த 1999ம் ஆண்டு கட்டப்பட்ட குடிநீர் மேல் தேக்க தொட்டி 35க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் விநியோகம் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்ப்படுகிறது.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் மேல் தேக்க தொட்டி மிகவும் மோசமான நிலையில் பீம் மற்றும் பில்லர்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. இங்கு வயதானவர்கள், சிறியவர்கள் குழந்தைகள் அருகில் செல்லும் போது குடிநீர் மேல் தேக்கத் தொட்டி இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனே செல்கின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.